Tuesday 28 May 2013

சுற்றுச் சூழல் பாதுகாப்பு

சென்னை வாசிகளே,

சுற்றுச் சூழல் மாசு பட்டுப் போனதில் நம் எல்லோருக்குமே பங்கு இருக்கிறது.  அதற்கு பிராயச்சித்தமாக முடிந்தவர்கள் மரம் நடுவோமே.  மரக்கன்றுகளைத் தேடி நீங்கள் செல்ல வேண்டாம்.  அதுவே உங்கள் வீடு தேடி வருகிறது.  எப்படி? ஒரே ஒரு குறுஞ்செய்தி போதுமே

மரக்கன்றுகள் வீடு தேடி வர sms to 91 9894062532


இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். மரக்கன்று இரண்டு வாரத்திற்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பியவரின் வீடு தேடி வரும். அவர்களின் வீடு, அதன் சூழல், போன்றவற்றை ஆராய்ந்து, மரக்கன்றை நட்டு, பின்னர் பராமரிக்கும் முறை பற்றி விளக்குவார்கள், அந்த மரத்திற்கு அவர்களுக்கு விருப்பமான குழந்தையின் பெயரை சூட்டுவார்கள்.  குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள் என்கிறார்கள் சென்னை 'நாளந்தா' சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.

6 comments:

  1. பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள்.

    >>>>

    ReplyDelete
  2. //குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள் என்கிறார்கள் சென்னை 'நாளந்தா' சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.//

    மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயல்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிவு எண்: 73 க்கு அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமையான திட்டம் !
    பகிர்வுக்கு நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள்
    அம்மா .

    ReplyDelete
  4. இயற்கை குறித்த விழிப்புணர்வு பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...!

    ReplyDelete
  5. நாளந்தா சமுதாய சேவைக்கு வாழ்த்துக்கள்... தகவலுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  6. சிறப்பான தகவல்..... மரம் நடுவோம்..... மண் செழிக்க!

    ReplyDelete